நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மது விற்பனை


நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 9 Jan 2022 5:04 PM GMT (Updated: 9 Jan 2022 5:04 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே நாளில் ரூ.6.16 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது

நாமக்கல்:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதையொட்டி டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதனால் நேற்று முன்தினமே மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்து கொண்டனர். எனவே நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 189 மதுக்கடைகள் உள்ளன. இவற்றில் நேற்று முன்தினம் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. நேற்று முன்தினம், ஒரே நாளில் மட்டும் ரூ.6 கோடியே 16 லட்சத்து 21 ஆயிரத்து 410-க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டதாகவும், வழக்கமாக சனிக்கிழமைகளில் ரூ.3½ கோடிக்கு மது விற்பனை இருக்கும் எனவும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story