220 லிட்டர் சாராயம் பறிமுதல், 2 பேர் கைது
மணல்மேடு அருகே 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணல்மேடு:
மணல்மேடு அருகே 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் ெசய்து, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 பேர் கைது
மணல்மேடு அருகே திருச்சிற்றம்பலம் பகுதியில் சாராயம் விற்பதாக மணல்மேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணல்மேடு போலீசார் அந்தபகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சாராயம் விற்றுக்கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் திருச்சிற்றம்பலம் மெயின் ரோட்டை சேர்ந்த சிவபெருமாள் (வயது 50), கீழத்தெருவை சேர்ந்த குழந்தைவேலு (35) என்பதும், இவர்கள் 2 பேரும் அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து தலா 110 லிட்டர் வீதம் மொத்தம் 220 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story