மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
உடுமலை அருகே வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
தளி
உடுமலை அருகே வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
12-ம் வகுப்பு மாணவி
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தீபாலபட்டியைச் சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 37). இவர் உடுமலை அருகே கரட்டுமடத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவிக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.
பாலியல் எண்ணங்களை தூண்டும் வகையில் அந்த பதிவு இருந்ததாக தெரிகிறது. இது போன்று தொடர்ச்சியாக குறுஞ்செய்திகளை அனுப்பி மாணவியிடம் ஆசிரியர் பழகி வந்துள்ளார். இதனை அந்த மாணவியின் சகோதரி கண்டுபிடித்து தனது உறவினரிடம் தெரிவித்துள்ளார்.
போக்சோவில் கைது
அதைத்தொடர்ந்து அவர் திருப்பூர் சைல்டு லைன் அமைப்பினருக்கு கடந்த 4-ந் தேதி புகார் அளித்துள்ளார். அதன் பேரில் கடந்த 5-ந் தேதி சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து கள ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர் உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் அசோக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இதுபோல் அவர் வேறு எந்த மாணவிகளுக்கும் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்ட சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story