மாவட்ட செய்திகள்

புதுக்கோட்டையில்சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு + "||" + Go on a bicycle and inspect the collector

புதுக்கோட்டையில்சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டையில்சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு
சைக்கிளில் சென்று கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் கவிதாராமு நேற்று சைக்கிளில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முகாம் அலுவலகத்தில் இருந்து சைக்கிளில் அவர் நேற்று மாலை புறப்பட்டார். தொடர்ந்து அவர் கீழ ராஜ வீதி, பிருந்தாவனம், வடக்கு ராஜ வீதி, பால் பண்ணை, அரசு மகளிர் கலைக்கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம் சத்தியமூர்த்தி சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக முகாம் அலுவலகத்திற்கு சென்றடைந்தார். சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலில் சென்று அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்ததை அவர் பார்வையிட்டார். மேலும் ஊரடங்கு விதி மீறல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து போலீசாரிடம் கேட்டறிந்தார். குறைவாக வழக்குப்பதிவு செய்திருந்தவர்களிடம் ஏன்? குறைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார். இதேபோல முக கவசம் அணியாமல் சாலையோரம் நின்றிருந்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி முக கவசங்களை கலெக்டர் கவிதாராமு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கடைகளில் ஆய்வு
சிவகிரி பகுதியில் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2. சைக்கிளில் சென்று ஆய்வு செய்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
சைக்கிளில் சென்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.
3. ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள்
ராஜபாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகளை அதிகாரி ஆய்வு செய்தார்.
4. பேரையூர், டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு
பேரையூர்,டி.கல்லுப்பட்டியில் பேரூராட்சிகளின் ஆணையாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
5. நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு
சங்கரன்கோவிலில் நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.