சங்கராபுரம் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் சாவு


சங்கராபுரம் அருகே  வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் சாவு
x
தினத்தந்தி 9 Jan 2022 11:20 PM IST (Updated: 9 Jan 2022 11:20 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அருகே வாகனம் மோதி தனியார் நிறுவன மேலாளர் சாவு


சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் தமிழ்அழகன்(வயது 32). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் நிதி மேலாளராக பணிபுரிந்து வந்த இவர் சம்பவத்தன்று பணம் வசூல் செய்வதற்காக பாவளம் கிராமத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தியாகராஜபுரம் மணி நதி ஆற்றுப்பாலம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story