மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 Jan 2022 6:09 PM GMT (Updated: 2022-01-09T23:39:13+05:30)

காரைக்குடியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

காரைக்குடி,

காரைக்குடி கழனிவாசல் பகுதியை சேர்ந்தவர் வள்ளியப்பன் (வயது 25). இவர் அப்பகுதியில் உள்ள கேபிள் டிவி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று புதூர் ரோட்டில் உள்ள பகுதியில் கேபிள் மாற்றுவதற்காக ஒரு வீட்டின் மாடியில் இருந்து மற்றொரு வீட்டின் மாடிபகுதிக்கு கேபிள் வயரை தூக்கி வீசியுள்ளார். அப்போது அந்த கேபிள் வயர், மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் வள்ளியப்பன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story