3,500 டன் யூரியா உரம் நெல்லை வந்தது


3,500 டன் யூரியா உரம் நெல்லை வந்தது
x
தினத்தந்தி 10 Jan 2022 12:13 AM IST (Updated: 10 Jan 2022 12:13 AM IST)
t-max-icont-min-icon

காரைக்காலில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு 3,500 டன் யூரியா உரம் வந்தது. மேலும் சிமெண்டு மூட்டைகளும் வந்திறங்கின.

நெல்லை:
காரைக்காலில் இருந்து ரெயில் மூலம் நெல்லைக்கு 3,500 டன் யூரியா உரம் வந்தது. மேலும் சிமெண்டு மூட்டைகளும் வந்திறங்கின.

யூரியா உர மூட்டைகள்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து உள்ளதால் பிசான நெல் சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பயிர் செழித்து வளருவதற்கு தேவையான யூரியா, பொட்டாஷ் உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து உர மூட்டைகளை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இப்கோ யூரியா உர மூட்டைகள் 40 ரெயில் பெட்டிகளில் மொத்தம் 3,500 டன் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தது. அதில் இருந்து உர மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து தென் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு உர மூட்டைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டன.

சிமெண்டு மூட்டைகள்

இதே போல் கரூர் பாளையம், திருச்சி டால்மியாபுரம் ரெயில் நிலையங்களில் இருந்து அந்தந்த பகுதி சிமெண்டு ஆலைகளில் இருந்து 21 ரெயில் பெட்டிகளில் சிமெண்டு மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சரக்கு ரெயில் நேற்று காலை நெல்லை சந்திப்புக்கு வந்தது. அந்த சிமெண்டு மூட்டைகள் லாரிகள் மூலம் தனியார் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

Next Story