ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
ஊரடங்கை மீறி சுற்றியவர்களுக்கு கொரோனா பரிசோதனை
நெமிலி
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித் திரிந்தவர்களை எச்சரிக்கும் பணியில் வருவாய்த் துறையினர், காவல் துறையினர், மருத்துவத் துறையினர் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நெமிலி பஸ் நிலையத்தில் ஊரடங்கு உத்தரவை பின்பற்றாமல் அவசியமின்றி வெளியில் சுற்றித் திறிந்தவர்களை மடக்கி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் அவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story