ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஓடும் ரெயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இலவரசி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயில்களில் ஏறி தீவிர சோதனை செய்தனர். ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் ஆலப்புழாைவ நோக்கி வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயில் கேத்தாண்டப்பட்டி-ஜோலார்பேட்டை இடையே சென்று கொண்டிருந்தது.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பெட்டியில் ஏறி சோதனை செய்தனர். பொருட்கள் வைக்கும் பகுதியில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்து பார்த்தபோது அதில் 5 கிலோ கஞ்சா கடத்தி வரப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. கஞ்சாைவ போலீசார் பறிமுதல் செய்தனர். ஓடும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story