மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அடுத்த கல்நார்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவரின் மகன் திருப்பதி (வயது24). இவர் அதேப்பகுதியை சேர்ந்த 14 வயதுடைய 10-ம் வபுப்பு மாணவியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து, பள்ளி மாணவியை கடத்தி சென்ற திருப்பதியை தேடி வந்தார். இந்தநிலையில் பள்ளி மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் சென்னைக்கு சென்று அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தேடி வருவதை அறிந்து நேற்று திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
மாணவி மைனர் என்பதால் ஜோலார்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story