மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 9 Jan 2022 7:15 PM GMT (Updated: 2022-01-10T00:45:18+05:30)

சிவகிரி பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் சிவகிரி அருகே ராயகிரி, தேவிபட்டினம் மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராயகிரி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த சிவன் மகன் ரமேஷ் (வயது 42) வேப்பங்குளம் அருகே முழு ஊரடங்கை மீறி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்றபோது போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். ரமேஷிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 65 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் தேவிபட்டினம் அருகே உள்ள கோழிப்பண்ணை முன்பாக மதுபாட்டில்கள் விற்றதாக தேவிபட்டினம் கீழூர் ராமசாமியாபுரத்தைச் சேர்ந்த பிள்ளையார் மகன் கிருஷ்ணமூர்த்தியை (35) போலீசார் கைது செய்தனர். இவரிடமிருந்து 85 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story