அணுமின் நிலைய ஊழியர்கள் உள்பட 170 பேருக்கு கொரோனா


அணுமின் நிலைய ஊழியர்கள் உள்பட 170 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2022 12:50 AM IST (Updated: 10 Jan 2022 12:50 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் 24 பேர் உள்பட 170 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலைய ஊழியர்கள் 24 பேர் உள்பட 170 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

170 பேர் பாதிப்பு

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் 4 அணு உலை கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். 

இந்த நிலையில் இங்கு பணிபுரிந்து வரும் ஊழியர்கள் 24 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் செட்டிகுளம் அணுவிஜய் நகரத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டத்தில் நேற்று மொத்தம் 170 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. இவர்களுடன் சேர்த்து  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 368 ஆக உயர்ந்தது. இவர்களில் 49 ஆயிரத்து 407 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 524 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மொத்தம் 437 பேர் பலியாகி உள்ளனர்.


Next Story