முழுஊரடங்கால் சாலையில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


முழுஊரடங்கால் சாலையில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2022 1:01 AM IST (Updated: 10 Jan 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கால் சாலையில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரை,
முழு ஊரடங்கால் சாலையில் சுற்றியவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
கண்காணிப்பு பணி
தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கும், 9-ந் தேதி ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு நடந்தது. 
மதுரையில் ஊரடங்கு காரணமாக அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் பரபரப் பாக இருக்கும் பெரியார் பஸ் நிலையம், கோரிப்பாளையம், காளவாசல், தெற்கு வாசல் ஆகிய சாலைகள் வெறிச்சோடின.
முக்கிய சாலைகளில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி கண்காணிப்பு பணியினை மேற்கொண்டனர். சில இடங்களில் மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பினர். அதே போல் முகக்கவசம் அணியாத வர்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று விழிப் புணர்வு ஏற்படுத்தினர்.
ரெயில் நிலையம்
அதே போல் அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், மார்க்கெட்டுகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. ஆனால் அதே வேளையில் சரக்கு போக்குவரத்து தடையின்றி நடந்தது. ஆஸ்பத்திரி, ரெயில் நிலையம் செல்வர்கள் ஆட்டோக்களில் சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பி வைத்தனர். பொதுமக்களின் ஒத்துழைப்போடு ஊரடங்கு அமைதியாக நடந்தது.

Next Story