தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை


தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை
x
தினத்தந்தி 10 Jan 2022 1:20 AM IST (Updated: 10 Jan 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.

தஞ்சாவூர்:
முழு ஊரடங்கு எதிரொலியாக தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
டாஸ்மாக் கடைகள்
பண்டிகை நாட்கள் என்றாலே மது பிரியர்களுக்கு புது உற்சாகம் மனதில் தொற்றி கொண்டு விடுகிறது. இந்த நாட்களில் மது பிரியர்கள் தங்களது நண்பர்களுக்கும் மது விருந்து அளித்து உற்சாகமாக பண்டிகையை கொண்டாடுவார்கள். இதனால் வழக்கத்தை காட்டிலும் பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதுவதை பார்க்க முடியும். இதன்காரணமாக ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை உச்சத்தை தொட்டு வருகிறது.
தற்போது ஒரு நாள் கடை அடைப்பு என்றால் கூட முதல்நாளே அதிகஅளவில் மதுப்பாட்டில்களை வாங்கி வைத்து கொள்ளும் போக்கு மது பிரியர்களிடம் அதிகரித்து வருகிறது. நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.
ரூ.7 கோடிக்கு மது விற்பனை
அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 160 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நேற்றுமுன்தினமே டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்களை வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. பொதுவாக தஞ்சை மாவட்டத்தில் சராசரியாக தினமும் ரூ.4 கோடி முதல் ரூ.4½ கோடி வரை மதுவிற்பனையாகும். ஆனால் நேற்று முழு ஊரடங்கு என்பதால் நேற்றுமுன்தினம் மட்டும் ரூ.7 கோடியே 4 லட்சத்திற்கு மது விற்பனை நடைபெற்றது. வழக்கத்தை விட ரூ.2½ கோடி மதிப்பில் கூடுதலாக மது விற்பனை நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story