3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பூண்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரின் மகன் பூவை சின்ராசு(வயது 23), கண்ணதாசனின் மகன் இளையராஜா(23) மற்றும் சித்திரவேலின் மகன் சக்திவேல்(23). இவர்கள் 3 பேர் வழிப்பறி, கொலை முயற்சி, அடிதடி என பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்த நிலையில், இன்ஸ்பெக்டர் சாயம் அன்பரசு தலைமையிலான போலீசார் அவர்களை கைது செய்தனர். மேலும் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணன் சுந்தர் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோரின் பரிந்துரையின்பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவின்படி அவர்கள் 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story