குமரியில் வெளியே சுற்றித்திரிந்த 210 பேருக்கு அபராதம்
குமரியில், நேற்று முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 210 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
நாகர்கோவில்:
குமரியில், நேற்று முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்த 210 பேருக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தீவிர கண்காணிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழுஊரடங்கு அரசு அமல்படுத்தியது. கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவையின்றி பொதுஇடங்களில் சுற்றித்தரிந்தவர்கள், முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
210 பேருக்கு அபராதம்
அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முககவசம் அணியாமல் பொதுஇடங்களில் சுற்றித்திரிந்த 210 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.42 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல் சமூக இடைவெளி கடைபிடிக்காத 40 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.8 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. மேலும், பல பகுதிகளில் தேவையின்றி வாகனங்களில் சுற்றியவர்களை எச்சரித்து அவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த கண்காணிப்பு பணி இன்று அதிகாலை வரை நீடித்தது.
Related Tags :
Next Story