முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 10 Jan 2022 6:24 PM IST (Updated: 10 Jan 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி முககவசம் அணியாத 303 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த விதிமுறைகளை மீறி பொது இடங்களில் கொரோனா தொற்று பரவும் வகையில் செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.200-ம், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராதம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 32 பேர் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றி திரிந்த 303 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.60 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் ரூ.61 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

Next Story