பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை:-
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பஞ்சாப் மாநிலத்துக்கு நரேந்திரமோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவர் உடனடியாக அங்கிருந்து திரும்ப நேரிட்டது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து மயிலாடுதுறை காமராஜர் சாலையில் அம்பேத்கர் சிலை முன்பு பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பட்டியல் அணி மாவட்ட செயலாளர் ஈழவேந்தன் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட தலைவர் வெங்கடேசன், மாநில வக்கீல் அணி தலைவர் ராஜேந்திரன், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன், தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில செயலாளர் நாஞ்சில் பாலு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நகர தலைவர் மோடி கண்ணன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஸ்ரீதர், சந்தோஷ், பிரசார அணி மாவட்ட தலைவர் அய்யா.சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டியல் அணி ஒன்றிய தலைவர் வெற்றிவேல் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story