சாராயம் விற்றவர் கைது


சாராயம் விற்றவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 6:56 PM IST (Updated: 10 Jan 2022 6:56 PM IST)
t-max-icont-min-icon

சாராயம் விற்றவர் கைது

திருக்கடையூர்:-

ஆக்கூர் அருகே மடப்புரம் சிதம்பரம் கோவில்பத்து பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது52). இவர் தனது வீட்டில் சாராயம் விற்பதாக செம்பனார்கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீசார், அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது பாலகிருஷ்ணன், சாராயம் விற்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.

Next Story