திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் வழங்கினார்
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
திண்டுக்கல்:
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் 1,330 குறளையும் ஒப்புவித்து வெற்றி பெற்றவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம், பாராட்டு சான்றிதழ், புத்தகம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் ராம்சன்ஸ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர் யோகேஸ் கிருஷ்ணன், நத்தம் அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி மாணவர் சிபி சக்கரவர்த்தி, வத்தலக்குண்டு பிக்ட்ரீம்ஸ் அகாடமி மாணவிகள் அக்ஷதா, ஆருத்திரா, நத்தம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி தனலட்சுமி ஆகிய 5 பேருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story