தரமான பட்டுப்புழுக்களை வழங்க கோரி பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு
தரமான பட்டுப்புழுக்களை வழங்க கோரி பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
தமிழ்நாடு பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில், விழிப்புணர்வு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. இதற்கு சாணார்பட்டி கிளை செயலாளர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்வராஜ், செயலாளர் பொன்னுச்சாமி, பொருளாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், இளம்புழு மையங்களில் இருந்து வழங்கப்படும் பட்டுப்புழுக்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. எனவே தமிழக அரசு இதில் தலையிட்டு பட்டுப்புழுக்களுக்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளின் நிலங்களில் பயிரிடப்படும் மல்பரி பயிர்களுக்கு ஏற்ப பட்டுப்புழு முட்டைகளை வழங்குவதுடன் அவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதையடுத்து சங்க நிர்வாகிகள் சார்பில் பட்டுவளர்ச்சித்துறை உதவி இயக்குனர் மேகலாவிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், இளம்புழு மையங்களில் இருந்து வழங்கப்படும் பட்டுப்புழுக்கள் தரமற்றதாக உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே தரமான பட்டுப்புழுக்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிற மாநில பட்டுப்புழு விவசாயிகளுக்கு வழங்கப்படுவதை போல் தமிழக விவசாயிகளுக்கும் ஊக்கத்தொகையாக ஒரு கிலோவுக்கு ரூ.50 வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுவை பெற்ற உதவி இயக்குனர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Tags :
Next Story