குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ரத்து
கொரானா பரவல் காரணமாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த குறைதீர்க்கம் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
ஊட்டி
கொரானா பரவல் காரணமாக ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வந்த குறைதீர்க்கம் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டு இருந்த பெட்டியில் மனுக்களை போட்டு சென்றனர்.
பெட்டி வைப்பு
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வந்தது. கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கலெக்டர் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்கள் மனு அளிப்பதற்காக மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறாது. பொதுமக்கள் இந்த பெட்டியில் மனுக்களை போட்டு செல்லலாம் என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது.
ஏரியை மீட்க வேண்டும்
கூட்டம் ரத்து செய்யப்பட்டும் பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். பண்பாடு மக்கள் தொடர்பக ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தலையாட்டுமந்து பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பர்ன்புட் ஏரி இருந்து வந்தது.
அப்போதைய ஆங்கிலேய அதிகாரி ஜான் சல்லீவன் ஊட்டி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அந்த ஏரி கட்டமைக்கப்பட்டது.
அவ்வப்போது ஏற்பட்ட மண்சரிவுகளால் ஏரி பகுதி மண்ணால் நிரம்பியது. அங்கு வசித்து வந்த சிலர் ஏரியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர்.
அங்கு தண்ணீர் எடுக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. தற்போது விவசாய நிலமாக மாற்றி ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. எனவே காணாமல்போன அந்த ஏரியை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இதன் நகல் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது.
அரசு வேலை
கூடலூர் தேவர்சோலையை சேர்ந்த கீதா அளித்த மனுவில், கடந்த 24.9.2021-ந் தேதி தேவர்சோலை எஸ்டேட்டில் புலி தாக்கி எனது கணவர் சந்திரன் உயிரிழந்தார். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் கருணை அடிப்படையில் அரசு வேலை தருவதாக உறுதியளித்தனர். இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை. எனவே, அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story