தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Jan 2022 9:29 PM IST (Updated: 10 Jan 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
சேதம் அடைந்த மின்கம்பம்
கன்னிவாடி அருகே உள்ள ஆண்டரசன்பட்டியில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்தபடி உள்ளது. எனவே பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படுவதை தடுக்க மின்கம்பத்தை மாற்ற வேண்டும். -முருகன், கன்னிவாடி.
கைகளை சுத்தம் செய்யும் வசதி
தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் ஏராளமான மக்கள் வருகின்றனர். எனவே கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க மக்கள் கைகளை சுத்தம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால் தற்போது அது பயன்பாட்டில் இல்லை. கொரோனாவின் 3-வது அலை பரவுவதால் அதை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -கதிரவன், தேனி.
குண்டும் குழியுமான சாலை
திண்டுக்கல் வடக்கு ரதவீதி தார்சாலை சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும். -கணேசன், திண்டுக்கல்.
தெருநாய்கள் தொல்லை
வத்தலக்குண்டு காந்திநகர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இரவில் தனியாக செல்லும் நபர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. குழந்தைகளை தெருவில் விளையாட விடுவதற்கு கூட பயமாக உள்ளது. எனவே தெருநாய்களின் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? -அக்கிம், வத்தலக்குண்டு.



Next Story