கச்சிராயப்பாளையம் வரதராஜபெருமாள் கோவிலில் முறைகேடு புகார் பொதுமக்கள் சாலை மறியல் 50 பேர் கைது


கச்சிராயப்பாளையம் வரதராஜபெருமாள் கோவிலில் முறைகேடு புகார் பொதுமக்கள் சாலை மறியல்  50 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 9:31 PM IST (Updated: 10 Jan 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

கச்சிராயப்பாளையம் வரதராஜபெருமாள் கோவிலில் முறைகேடு புகார் பொதுமக்கள் சாலை மறியல் 50 பேர் கைது

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி அடுத்த கச்சிராயப்பாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகே ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முறைகேடுகள் நடைபெறுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது.

இந்த நிலையில் இந்து ஆலய சேவா அறக்கட்டளை நிர்வாகி ராமு தலைமையில் கிராம மக்கள் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வரதராஜ பெருமாள் கோவிலுக்கு பட்டாச்சாரியார் நியமனம் செய்யாததை கண்டித்தும், கோவிலில் நடக்கும் முறைகேடுகளை  கண்டுகொள்ளாமலும் இருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து சாலை மறியல் நடைபெற்றது.

இதுபற்றிய தகவல் அறிந்த கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்  மனு கொடுக்க வேண்டும். சாலை மறியல் செய்யக்கூடாது என்றனர்.

ஆனால்  அவர்கள் அதை ஏற்க மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட அறக்கட்டளை நிர்வாகி ராமு உள்பட 50 பேரை போலீசார் கைது செய்து அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரையும் விடுவித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கச்சிராயப்பாளையம்-கள்ளக்குறிச்சி சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story