ரெயில்வே நுழைவு பால தடுப்பு கம்பியில் சிக்கிய லாரி
மொடக்குறிச்சி அருகே ரெயில்வே நுழைவு பால தடுப்பு கம்பியில் சிக்கிய லாரியால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கணபதிபாளையத்துக்கு நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரி மொடக்குறிச்சி அருகே உள்ள சாவடிபாளையம்புதூர் கேட்டுபுதூரில் காலை 8 மணி அளவில் ெரயில்வே நுழைவு பாலத்தில் செல்ல முயன்றது.
அப்போது நுழைவு பாலம் முன்பு அமைக்கப்பட்டு் உள்ள உயர தடுப்பு கம்பியில் லாரி சிக்கிக்கொண்டது. மேற்கொண்டு லாரியை அதன் டிரைவரால் நகர்த்த முடியவில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்கள், கார், ஆட்டோ போன்ற சிறிய வாகனங்கள் மட்டும் சென்று வந்தன. பஸ், லாரி, வேன், கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. ரோட்டின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
இதுபற்றி அறிந்ததும் மொடக்குறிச்சி போலீசார் மற்றும் ரெயில்வே போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ஈரோடு - கரூர் செல்லும் கனரக வாகனம் மற்றும் பஸ் ஆகியவற்றை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
தொடர்ந்து ெரயில்வே நுழைவு பாலத்தில் சிக்கிய லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பகல் 11 மணி அளவில் லாரி மீட்கப்பட்டது. அதன்பின்னரே லாரி அங்கிருந்து சென்றது. அதனை தொடர்ந்து போக்குவரத்து நிலமை சீராகி அனைத்து வாகனங்களும் ரெயில்வே நுழைவு பாலம் வழியாக சென்றன. லாரி ரெயில்வே நுழைவு பாலத்தில் சிக்கியதால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story