தினத்தந்தி புகார் பெட்டி
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தெற்கு தென்பரை கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டியின் தூண்களில் நான்கு புறமும் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் அருகிலேயே பள்ளிக்கூடம் இருப்பதால் பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், தென்பரை கிராமம்.
குண்டும், குழியுமான சாலை
திருவாரூரில் உழவர் பயிற்சி மையத்தில் பல்வேறு மாணவர்கள், மகளிர் குழுக்கள், பல்வேறு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த பல்கலைக்கழகத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். மேலும் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருவாரூர்.
சாய்ந்த மின்கம்பம்
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம், மேமாத்தூர் ஊராட்சி குரு ஸ்தலம், மஞ்சள் ஆற்றங்கரை சாலையில் உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதன் அருகிலேயே வீடுகள் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர். மின்கம்பம் மிகவும் சேதமடைந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அந்த மின்கம்பம் எந்த நேரமும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மேமாத்தூர்.
Related Tags :
Next Story