ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Jan 2022 10:26 PM IST (Updated: 10 Jan 2022 10:26 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 992 பேருக்கு பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலின்படி மாவட்டத்தில் புதிதாக 123 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 490 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 76 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 151 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 712 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 627 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story