விழுப்புரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தனர்


விழுப்புரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 10 Jan 2022 10:42 PM IST (Updated: 10 Jan 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான், கலெக்டர் மோகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

விழுப்புரம், 

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

இந்தியா முழுவதும் கொரோனா நோய் பரவலை தடுக்க பூஸ்டர் டோஸ் எனப்படும் 3-வது தவணை தடுப்பூசி போடும் பணிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் முதல்கட்டமாக 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு 273 நாட்கள் (கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி முதல் மே 3-ந் தேதி வரை) முடிந்தவர்களில் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று முதல் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, ராதாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முன்களப்பணியாளர்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உடையவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் மோகன் தொடங்கி வைத்தார். 

முண்டியம்பாக்கத்தில் ஆய்வு

அதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள படுக்கை வசதிகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இம்முகாமில் எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
முன்னதாக செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியம் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story