மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறிய 553 பேர் மீது வழக்கு ரூ 1 லட்சம் அபராதம் வசூல்
தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 553 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ 1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியதாக 553 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தர்மபுாி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் ஆங்காங்கே போலீசார் சோதனைச்சாவடிகள் அமைத்தும், தடுப்புகள் அமைத்தும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தொப்பூர், சப்பானிப்பட்டி, மஞ்சவாடி உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் போலீசார் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே அனுமதித்தனர். மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்த வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இந்த முழு ஊரடங்கின் போது முககவசம் அணியாமல் வந்தது, சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை மீறியதாக தர்மபுரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 221 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோன்று அரூர் சரக கிரகத்தில் 122 பேர் மீதும், பென்னாகரம் சரகத்தில் 74 பேர் மீதும், பாலக்கோடு சரகத்தில் 136 பேர் மீதும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 553 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
Related Tags :
Next Story