கொத்தங்குடி ரேஷன்கடை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கூத்தாநல்லூர் அருகே பாதியிலேயே நிறுத்தப்பட்ட கொத்தங்குடி ரேஷன்கடை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே பாதியிலேயே நிறுத்தப்பட்ட கொத்தங்குடி ரேஷன்கடை கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரேஷன்கடை பணிகள் நிறுத்தம்
கூத்தாநல்லூர் அருகே உள்ள கொத்தங்குடியில் 30 ஆண்டுகளுக்கு முன் ரேஷன் கடை கட்டப்பட்டு அப்பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அந்த கட்டிடத்தில் கொத்தங்குடி, பாண்டுகுடி ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்கள் அரிசி, கோதுமை, சீனி, துவரம் பருப்பு, மண்எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர்.
தற்போது இந்த கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டு சிமெண்டு காரைகள் பெயர்ந்து கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவில் காணப்படுகிறது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் கட்டிடத்தின் உள்ளே சென்று பொருட்கள் சேதமடைந்த நிலையில், அங்கு ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய ரேஷன் கடை
இதையடுத்து வேறு ஒரு வாடகை கட்டிடத்தில் தற்போது வரை ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு அதே இடத்தில் புதிதாக ரேஷன் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த ரேஷன் கடை கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டுமான பணிகளை மேற்கொண்டனர்.
விரைந்து முடிக்க வேண்டும்
ஆனால் புதிதாக கட்டப்பட்டு வரும் ரேஷன் கடை கட்டுமான பணிகள் முழுமை அடையாமல் பாதியிலேயே நிற்கிறது. எனவே பாதியிலேயே நிறுத்தப்பட்ட ரேஷன் கடை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story