மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள துவார் உயர்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் சீனியப்பா (வயது 57). இவர் அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் 2 மாதத்திற்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு புகார் செய்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட அலுவலர் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தொடர்புடைய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா சீனியப்பாவை கைது செய்து ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story