மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரம்


மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று  முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரம்
x
தினத்தந்தி 10 Jan 2022 11:09 PM IST (Updated: 10 Jan 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 969 ஆக உயர்ந்தது. கொரோனாவுக்கு தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிற நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பொதுஇடங்களில் முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பதை தீவிரமாக்கி உள்ளனர். புதுக்கோட்டை நகரப்பகுதியில் ஆங்காங்கே போலீசார் நின்று முக கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் அதிகப்படுத்த தொடங்கி உள்ளனர்.

Next Story