17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது:போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது


17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது:போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 11:30 PM IST (Updated: 10 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் அருகே 17 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த நிலையில், வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்:
இளம்வயது திருமணம்
நாமக்கல் அருகே உள்ள பொட்டணம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் சீரங்கன் (வயது 21). இவர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை இளம்வயது திருமணம் செய்தார். இதையடுத்து சிறுமி கர்ப்பமானார். அவருக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.
அப்போது சிறுமி என்பதை அறிந்த டாக்டர்கள், குழந்தைகள் நலக்குழுமத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சைல்டு லைன் அமைப்பினர் நடத்திய விசாரணையில், இளம்வயது திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. 
கைது
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் நாமக்கல் நல்லிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் சிறுமியை திருமணம் செய்த சீரங்கனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story