நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 99 வாகனங்கள் பறிமுதல்-போக்குவரத்து துறையினர் நடவடிக்கை


நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 99 வாகனங்கள் பறிமுதல்-போக்குவரத்து துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2022 11:30 PM IST (Updated: 10 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் போக்குவரத்து துறையினர் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நாமக்கல்:
99 வாகனங்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து துறையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், உமாமகேஸ்வரி மற்றும் ராசிபுரம், பரமத்திவேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இதில் 4,313 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 1,110 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் ரூ.30 லட்சத்து 58 ஆயிரத்து 974 வரிவசூல் செய்யப்பட்டது. அதேபோல் 366 வாகனங்களுக்கு ரூ.23 லட்சத்து 99 ஆயிரத்து 350 வரி விதிக்கப்பட்டது. சோதனையின்போது தகுதிச்சான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாதது, வரி செலுத்தாமல் இயக்கியது உள்பட உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அறிவுரை
மேலும் கொரோனா பெருந்தொற்று பரவுதலை தடுப்பதற்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி உபயோகித்தல், வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட பயணிகளை மட்டுமே ஏற்றுதல், முககவசம் அணிதல் போன்றவற்றை கடைபிடிக்க ஷேர் ஆட்டோ, அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story