நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு


நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Jan 2022 11:30 PM IST (Updated: 10 Jan 2022 11:30 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் 3 நாட்கள் மது கடைகளை மூட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வருகிற 15-ந் தேதியும், வள்ளலார் தினத்தை முன்னிட்டு 18-ந் தேதியும், குடியரசு தினமான 26-ந் தேதியும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 15, 18 மற்றும் 26-ந் தேதிகளில் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும். மேற்கண்டன 3 நாட்களும் மதுபான விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

Next Story