தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 Jan 2022 11:33 PM IST (Updated: 10 Jan 2022 11:33 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி

குடிநீர் கிணற்றின் அவலநிலை
வில்லுக்குறி பேரூராட்சி பி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து தான் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வளவு முக்கியமான இந்த கிணற்றில் குப்பை மற்றும் தூசி கிடக்கிறது. இதனால் குடிநீர் மாசுபடும் நிலை உள்ளது. எனவே குடிநீர் கிணறு மாசுபடுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                                      -ராஜன், வில்லுக்குறி.
ஓடையில் தேங்கும் கழிவுநீர்
பூதப்பாண்டி வடக்கு பிரதான வீதியில் உள்ள கழிவுநீர் ஓடையில் சாக்கடை நீர் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் பாய்ந்து செல்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                            -ஈஸ்வரன், பூதப்பாண்டி.
சாலை விரிவாக்கம் எப்போது?
பூவன்கோடு முதல் குமரன்குடி வழியாக தாணிவிளை செல்லும் சாலையை விரிவாக்கம் செய்ய சுமார் 2 மாதங்களுக்கு முன்பாக பணி தொடங்கப்பட்டது. இதற்காக தோண்டப்பட்ட குழியில் தினமும் வாகனங்கள் விழுந்து விபத்து நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்கப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                                                        -ம.ஜஸ்டின், குமரன்குடி.
குப்பையை அகற்ற வேண்டும்
நாகர்கோவில்-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் தேரேகால்புதூரில் நெடுஞ்சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரம் உள்ள குப்பையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.
                                                  -செல்வகுமரன், ஆரல்வாய்மொழி.
மூடப்படாத குழி
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் 2-வது வார்டுக்கு உட்பட்ட கேசவ திருப்பாபுரத்தில் காமராஜர் தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டப்பட்டது. பணி முடிந்த பிறகும் அந்த குழி மூடப்படவில்லை. இதனால் குறுகலான தெருவில் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 
                                                     -பி.எஸ்.ராஜா, வெட்டூர்ணிமடம்.
சீரமைக்க வேண்டிய சாலை
பொழிக்கரை பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் நடந்து மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகுகிறார்கள். வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                              -அந்தோணி தாசன், பொழிக்கரை.
 


Next Story