மேலும் 238 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 238 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது.
238 பேருக்கு கொரோனா
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு கடந்த 2 நாட்களாக 200-ஐ தாண்டியது. இந்தநிலையில் நேற்று மீண்டும் அதிகரித்து திருப்பூர் மாவட்டத்தில் 238 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தொழில் நகரான திருப்பூரில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் மற்றும் கோவையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை மையங்கள்
மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 99 ஆயிரத்து 818 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 68 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 722 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,068 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனாவுக்கு நேற்று பலி இல்லை. இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,028 ஆக உள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அரசு மருத்துவமனைகளை தவிர கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் 100 படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல் குமரன் கல்லூரியிலும் ஆக்சிஜன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story