ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 10 Jan 2022 11:37 PM IST (Updated: 10 Jan 2022 11:37 PM IST)
t-max-icont-min-icon

ஒரே நாளில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கரூர், 
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 15 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story