பாம்பன் புதிய ரெயில் பாலத்தில் இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தொடங்கியது
பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி தொடங்கியது.
ராமேசுவரம்,
பாம்பன் கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் இரும்பு கர்டர் பொருத்தும் பணி தொடங்கியது.
பாம்பன் ெரயில் பாலம்
கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் அமைக்கப்பட்டு, 104 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையாகி விட்டது. இதனால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.400 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டப்படுகிறது. இந்த பாலப்பணி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகவே நடந்து வருகின்றது.
இதுவரை பாம்பன் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் வரையிலான கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிவடைந்து விட்டன. மேலும் மண்டபம் பகுதியில் இருந்து தூக்குப்பாலம் இடைப்பட்ட கடல் பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகின்றது. இந்த பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன.
இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி"
இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரெயில் பால தூண்கள் மீது இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணி தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்காக சத்திரகுடியில் தயார் செய்யப்பட்டு வைக்கப்பட்டு இருந்த இரும்பு கர்டர்கள் கனரக வாகனம் மூலம் பாம்பன் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து கடலில் நடைபெற்று வரும் புதிய ரெயில் பாலத்தின் தூண்களில் கிரேன் மூலம் ஏற்றப்பட்டு கேன்ட்ரி மூலம் கர்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுபற்றி ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் கடலில் புதிய ரெயில் பாலத்துக்காக மொத்தம் 343 தூண்கள் அமைக்கப்படுகின்றன. இதுவரையிலும் 250-க்கும் அதிகமான தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.
செப்டம்பர் மாதத்திற்குள்...
அதுபோல் புதிய ரெயில் பாலத்திற்காக 99 கர்டர்கள் தூண்கள் மீது பொருத்தப்பட உள்ளன. தற்போது புதிய இரும்பு கர்டர்கள் பொருத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 இரும்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மீதமுள்ள கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெறும்.
புதிய தூக்கு பாலத்தின் எடை மட்டும் 500 டன் இருக்கும். மேல்நோக்கி தானாகவே திறந்து மூடும் வகையில் புதிய தூக்கு பாலம் அமைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மழை சீசன் தொடங்கும் முன்பு செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக புதிய ரெயில் பாலத்தின் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story