ரப்பர் ஷீட் திருடியவர் கைது


ரப்பர் ஷீட் திருடியவர் கைது
x
தினத்தந்தி 10 Jan 2022 11:50 PM IST (Updated: 10 Jan 2022 11:50 PM IST)
t-max-icont-min-icon

ரப்பர் ஷீட் திருடியவர் கைது

பத்மநாபபுரம்:
தக்கலை அருகே உள்ள குழிக்கோடு சடையன்கல் பகுதியை சேர்ந்தவர் லாசர் (வயது 46). இவரது வீட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 35 ரப்பர் ஷீட்டை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் அருளப்பன் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பிரின்ஸ்குமார் (43) என்பவர் ரப்பர் ஷீட்டுகளை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து பிரின்ஸ் குமாரை போலீசார் கைது செய்தனர்.

Next Story