ஆர்ப்பாட்டம்


ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Jan 2022 1:13 AM IST (Updated: 11 Jan 2022 1:13 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சி.ஐ.டி.யு. ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்,
விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சி.ஐ.டி.யு. ஊழியர் சங்கத்தின் சார்பில் விஜயபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துப்புரவு பணியாளர்களிடம் பிடித்தம் செய்யப்படும் சேமநிதி தொகையை உடனே வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். நகர விரிவாக்கத்திற்கு ஏற்ப பணியாளர் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க தலைவர் பாலசுப்பிரமணியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் முருகன் ஆகியோர் பேசினர். இதில் மாவட்ட தலைவர் திருமலை, முனியாண்டி, ரங்கையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story