குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,
ராஜபாளையத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
ராஜபாளையம் நகராட்சியின் 30-வது வார்டை சேர்ந்த தோப்புபட்டி பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் வாரம் ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களாக இந்த பகுதியினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப் படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டதாக தெரிகிறது. ஆனால் நகராட்சி நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் காலி குடங்களுடன் சங்கரன் கோவில் முக்கு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தெற்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் நகராட்சி அதிகாரிகளிடம் பேசி உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என கூறினர். போலீசாரின் உறுதியை ஏற்றுக் கொண்ட பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story