கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை


கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை
x
தினத்தந்தி 10 Jan 2022 7:59 PM GMT (Updated: 10 Jan 2022 7:59 PM GMT)

கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.

விருதுநகர், 
கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர். 
புத்தாடை 
இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின் போது இத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் பணி பட்டியலின்படி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடை மற்றும் கோவில் பணியாளர் நபர் ஒருவருக்கு 2 எண்ணிக்கையிலான சீருடைகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார்.
 அதன்படி கோவிலில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களையும் கோவிலுக்கு  வருகை தரும் பக்தர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் அர்ச்சகர், பட்டாச்சாரியார், பூசாரிகளுக்கு மயில்கண் பார்டர் பருத்திவேட்டியும், பெண் பூசாரி மற்றும் கோவிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில் மஞ்சள் நிற பார்டருடன் கூடிய புடவையும், ஆண் பணியாளர்களுக்கு பழுப்பு நிற சட்டை மற்றும் சந்தன நிற சட்டை துணியும் வழங்கப்படுகிறது.
அமைச்சர்கள் வழங்கினர் 
 சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில், சாத்தூர் வெங்கடாசலபதி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், அருப்புக்கோட்டை சொக்கநாத சுவாமி கோவில்,  விருதுநகர் சொக்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில்  உள்ளிட்ட 16 கோவிலைச் சேர்ந்த 27அர்ச்சகர்கள் மற்றும் 32 பணியாளர்கள் என மொத்தம் 59 அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகளை கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரதுரை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story