புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 Jan 2022 1:55 AM IST (Updated: 11 Jan 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் 4-வது வார்டில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடாகவும் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படுமா? 
பொதுமக்கள், ஆர்.எஸ்.மங்கலம்.
நாய்கள் தொல்லை
மதுரை காமராஜர் சாலை நவரத்னபுரம் பகுதியில் தெரு நாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. குழந்தைகளை விரட்டி கடிக்க வருவதால் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வர பயப்படுகின்றனர். வாகனங்களின் குறுக்கே பாய்வதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே, தொல்லை தரும் நாய்களை பிடித்து அப்புறப்படு்த்த வேண்டும்.
சிவகுமார், மதுரை.
அடிப்படை வசதி தேவை 
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இனாம்செட்டிகுளம் ஊராட்சி காமராஜர்புரம் பகுதியில் வாருகால் வசதியின்றி கழிவுநீர் சாலையில் வழிந்தோடுகிறது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரும் வீணாகி வருகிறது. சாலை வசதியும் இல்லை. மின்வயர் அறுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
ராஜா, ராஜபாளையம்.
எரியாத மின்விளக்கு
 ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியம் கோவிலாங்குளம் பஞ்சாயத்து ஆரைக்குடியில் உள்ள உயர்மின்கோபுரத்தின் விளக்கு பல நாட்களாக எரியவில்லை. இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இருட்டை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதால் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
முருகலிங்கம், கமுதி. 
தேங்கி நிற்கும் கழிவுநீர் 
ராமநாதபுரம் மாவட்டம் தேவேந்திரர் நகரில் சாக்கடை கழிவுநீர் செல்ல பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பொதுமக்களின் நலன்கருதி இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? 
குமரன், ராமநாதபுரம்.
ஆபத்தான டிரான்ஸ்பார்மர்   
 சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அரசு ஆஸ்பத்திரியின் அருகில் டிரான்ஸ்பார்மர் தடுப்பு வேலியின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதியில் சாலையின் ஓரத்தில் இந்த டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன் அதிகாரிகள் டிரான்ஸ்பார்மருக்கு தடுப்பு வேலி அமைத்து தரவேண்டும்.
இளங்கோ, இளையான்குடி.

Next Story