திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்


திராவிடர் கழகத்தினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Jan 2022 2:10 AM IST (Updated: 11 Jan 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து ஒரத்தநாட்டில் திராவிடர் கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ஒரத்தநாடு;
கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து ஒரத்தநாட்டில் திராவிடர் கழகத்தினர்  சாலை மறியலில் ஈடுபட்டனர்
பெரியார் சிலை அவமதிப்பு
கோவை அருகே பெரியார் சிலை மர்ம நபர்களால் அவமதிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் திராவிடர் கழகத்தினர் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்துக்கு திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
மேலும் திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து திராவிடர் கழகத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story