சேலத்தில் ரெயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்


சேலத்தில் ரெயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 11 Jan 2022 2:59 AM IST (Updated: 11 Jan 2022 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் ரெயிலில் கடத்தப்பட்ட 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சூரமங்கலம்
சேலம் வழியாக செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு சேலத்துக்கு வந்து சேர்ந்த, தன்பாத்-ஆலப்புழா (வண்டி எண் 13351) விரைவு ரெயிலில் சேலம் ரெயில்வே போலீசார் பாலமுருகன், கிருஷ்ணன், ராமன் ஆகியோர் ஏறி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது டி - 3 பெட்டியில் பை (பேக்) ஒன்று சந்தேகப்படும் படியாக கிடந்தது. 
அதன்பிறகு அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் அந்த பேக் யாருடையது என போலீசார் விசாரணை செய்தனர். அந்த பை யாருடையது என தெரியாத நிலையில் அந்த பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் சுமார் 15 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை சேலம் ரெயில்வே போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் சேலம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் கஞ்சா ஒப்படைக்கப்பட்டது.

Next Story