முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூல்


முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூல்
x
தினத்தந்தி 11 Jan 2022 3:01 AM IST (Updated: 11 Jan 2022 3:01 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் ரூ.26 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அன்று கட்டுப்பாடுகளை மீறி மாவட்டத்தில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 122 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரத்து 400-ம், சமூக இடைவெளி பின்பற்றாத 4 பேருக்கு தலா ரூ.500 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரமும் என போலீசார் அபராதம் விதித்து வசூலித்தனர்.

Next Story