மணப்பாடு பகுதியில் புதன்கிழமை மின்தடை


மணப்பாடு பகுதியில் புதன்கிழமை மின்தடை
x
தினத்தந்தி 11 Jan 2022 5:33 PM IST (Updated: 11 Jan 2022 5:33 PM IST)
t-max-icont-min-icon

மணப்பாடு பகுதியில் இன்று(புதன்கிழமை) மின்தடை ஏற்படும் என திருச்செந்தூர் கோட்ட மின்வினியோக பொறியாளர் ராம் மோகன் தெரிவித்துள்ளார்

உடன்குடி:
திருச்செந்தூர் துணை மின்நிலையத்தில் இன்று (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் ஆலந்தலை, கணேசபுரம், கந்தசாமிபுரம், கல்லாமொழி, மணப்பாடு, குலசேகரன்பட்டினம், சிறுநாடார்குடியிருப்பு ஆகிய பகுதிகளுக்கு இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இந்த தகவலை, திருச்செந்தூர் கோட்ட மின்வினியோக பொறியாளர் ராம் மோகன் தெரிவித்துள்ளார்.

Next Story