கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி நகரசபை அலுவலகத்தை ெபாதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
முற்றுகை
கோவில்பட்டி 27-வது வார்டு வள்ளுவர் தெரு, கக்கன்ஜி நகர், அசோக் நகர், கதிரேசன் கோவில் மெயின் ரோடு, வ.உ.சி. நகர் கிழக்கு பகுதி மக்கள் செண்பகராஜ் என்பவர் தலைமையில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
பின்னர் பொறியாளர் ரமேசை சந்தித்து அவர் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருந்ததாவது:-
சாலைவசதி
கோவில்பட்டி நகரசபை 27-வது வார்டு வள்ளுவர் தெரு, கக்கன்ஜி நகர், அசோக் நகர், கதிரேசன் கோவில் மெயின் ரோடு, வ.உ.சி. நகர் கிழக்கு பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக சாலை வசதி செய்யப்படவில்லை. நள்ளிரவு நேரங்களில் குடிநீர் வழங்கப்படுவதால், வேலைக்கு செல்லும் பெரும்பாலான மக்கள் குடிநீர் பிடிப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். இப்பகுதிகளில் கழிவு நீர் செல்லும் வாறுகால் சுத்தம் செய்யப்படாததால், கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நகரசபை நிர்வாகம் இப்பகுதிகளில் வாறுகால்களை சீரமைத்து ரோடுகள் அமைத்து தரவேண்டும். காலை, மாலையில் குடிநீர் வினியோகம் செய்வதற்கு ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொறியாளர் உறுதி
மனுவை பெற்றுக்கொண்ட நகரசபை பொறியாளர் கோரிக்கைகளை நேரில் சென்று ஆய்வு நடத்தி, பகல் வேளைகளில் குடிநீர் வினியோகம் செய்யவும், வாறுகால்கள் சுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும், ரோடுகள் அமைப்பதற்கு மதிப்பீடு தயாரித்து, அனுமதி பெற்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story