வயலில் நாற்று நட்ட பெண் மின்வயர் அறுந்து விழுந்து சாவு


வயலில் நாற்று நட்ட பெண் மின்வயர் அறுந்து விழுந்து சாவு
x
தினத்தந்தி 11 Jan 2022 6:11 PM IST (Updated: 11 Jan 2022 6:11 PM IST)
t-max-icont-min-icon

ேசாளிங்கரில் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தபோது மின்வயர் அறுந்து விழுந்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சோளிங்கர்

ேசாளிங்கரில் வயலில் நாற்று நட்டுக்கொண்டிருந்தபோது மின்வயர் அறுந்து விழுந்ததில் உடலில் மின்சாரம் பாய்ந்து பெண் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாய நிலம்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட சபாபதி நகர் பின்புறம் உள்ள சோமசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த கெங்காதரன் என்பவருக்கு  விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சீனிவாசன் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

நேற்று அந்த விவசாய நிலத்தில் நாற்று நடும் பணி நடந்தது சோமசமுத்திரத்தில் இருந்து 12 பேர் நாற்று நடும் பணிக்காக வந்திருந்தனர். 

அவர்கள் 12 பேரும் முதலில் பக்கத்து வயலில் நாற்று நடவு செய்தனர். அந்த பணி முடிந்ததும் சீனிவாசன் குத்தகை எடுத்த வயலில் முதலில் 6 பேர் மட்டும் வந்து பணியில் ஈடுபட்டனர்.

மின்வயர் அறுந்து விழுந்தது

அப்போது எதிர்பாரத விதமாக வயலுக்கு மேலே சென்ற மின் வயர் அறுந்து நடவு பணியில் ஈடுபட்டிருந்த உஷா (வயது 58) மீது விழுந்தது. அதில் உடலில் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உஷா இறந்து விட்டார்.
உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அருகில் நடவு பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் மற்றும் பக்கத்தில் இருந்த வயலில் வேலை செய்த 6 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  இறந்த உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிேசாதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு சோளிங்கர் கோட்ட மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர் சங்கர் தலைமைலயிலான மின்பணியாளர்கள் நேரில் வந்து விசாரித்தனர்.

இறப்பு சம்பவம் நடந்த பகுதியில் மின்வயர்கள் சீராக இல்லை என்றும் அதனை சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர். 
மின்வாரியத்தினர் முன்பே இதனை சீரமைத்திருந்தால் விபரீதங்களை தடுத்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

குடும்பம்

இறந்த உஷாவின் கணவர் சுப்பிரமணியன். இவர்களுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
நாற்று நடும் பணியின் போது மின் விபத்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வாழ்க்கை பதித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story